வெள்ளி, 23 மே, 2014

பிறேசிலைச் சேர்ந்த மார்செல் பெர்னாண்டஸ் என்ற சிறுவன் கின்னஸ் சாதனை….!!

சிறுவனொருவன் அதிவிரைவாக ஸ்மார்ட்போனில் டைப் செய்து உலகின் அதிவிரைவான தொலைபேசி டைப் செய்பவர் என்ற கின்னஸ் உலக சாதனை படைத்து பெருமையடைந்துள்ளார்.

பிறேசிலைச் சேர்ந்த மார்செல் பெர்னாண்டஸ் என்ற சிறுவனே இப்புதிய சாதனையை அண்மையில் ஏற்படுத்தியுள்ளார். இச்சிறுவன் 25 சொற்களைக்கொண்ட பந்தியை ஒன்றை 18.19 விநாடிகளில் தொடு திரையில் டைப் செய்துள்ளார்.
இவ்வருடம் ஜனவரியில் இதே பந்தியை 18.44 விநாடிகளில் மைக்ரோசொப்டின் புதிய விண்டோஸ் தொலைபேசியின் மென்பொருள் மூலம் டைப் செய்து
கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

இதனை புதிதாக பெல்ஸ்கி கீபோட் எனும் மென்பொருள் மூலம் பெர்னாண்டஸ் முறியடித்தள்ளார்.

கடந்த ஜனவரியில் பெர்னாண்டஸ் இச்சாதனையை ஏற்படுத்தியபோதிலும் மே 15ஆம் திகதியே அது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பெல்ஸ்கி கீபோட்டினை விளம்பரப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்ட கின்னஸ் சாதனை நிகழ்வின் முதல் நாளிலேயே பெர்னாண்டஸ் இச்சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

‘நான் சிறுவயது முதல் கையடக்கத் தொலைபேசிகளை விரும்புகிறேன். ஆனால் நான் அதற்கு அடிமையானதாக கருதவில்லை. முழுநாளும் அவற்றுடன் இருக்கமாட்டேன்’ எனக் கூறியுள்ளார் பெர்னாண்டஸ்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக