புதன், 30 ஏப்ரல், 2014

குருணாகல்- பொத்துஹர ரயில் விபத்தால்10 கோடி ரூபா நஷ்டம்..!! (படங்கள் இணைப்பு )

குருணாகல்- பொத்துஹர ரயில் நிலையத்தில்இன்று காலை இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியமைக்கு காரணம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பளை நோக்கி பயணித்த ரயிலின் சாரதி சமிக்ஞையை கவனிக்காமையே என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

இதே வேளை இந்த விபத்தே இலங்கையில் அதிகம் நஷ்டத்தை ஏற்படுத்திய ரயில் விபத்து எனவும் இந்த விபத்தினால் 10 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரத அதிகாரி பி.எல்.பி. ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
 
அத்தோடு இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு ஒன்றினை நியமிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக