வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஆகியோரக்கிடையில் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை முதற்கட்டமாக இடம்பெற்ற இச்சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பாக அமைந்திருந்தது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்லுறவை வலுப்படுத்துவதும், பேணுவதும் இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.
'புல்மோட்டை மீனவர்கள் எதிர்நோக்கும் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள்', 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகள்', வடக்கு மாகாணத் திணைக்களங்களில் கடமையாற்றும் கிழக்கு மாகாணத்தில் குடியிருப்புக்களைக் கொண்ட உத்தியோகத்தர்கள் தொடர்பான பிரச்சினைகள் ஆகிய முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் மேற்படி விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதற்கு உடன்பாடு காணப்பட்டது.
இவ்வாறான சந்திப்புக்கள் எதிர்கால செயற்பாடுகளுக்கு நல்ல ஆரம்பமாக அமையும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர்சி.வி..விக்னேஷ்வரன் இதன்போது தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக