ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 29.04.2014 ( செவ்வாய்க்கிழமை) அதிகாலை பருத்தித்துறை பகுதிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
பருத்தித்துறை, முனை பகுதிக்குச் சென்ற அமைச்சர் அவர்கள் கடற்றொழிலாளர்கள், கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், மீன் சந்தை வியாபாரிகள் ஆகியோரைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் தொழில் முயற்சிகள் தொடர்பில் கலந்துரையாடினார்.பருத்தித்துறை சந்தைப் பகுதிக்குச் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குள்ள வியாபாரிகளுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர் அமைச்சரவைக் கூட்டங்களின் போதும் பாராளுமன்றத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு மாகாண மக்களின் நலன்கருதியே தொடர்ந்தும் கதைத்தும் அதற்காகவே செயற்பட்டும் வருகின்றார் எனத் தெரிவித்தார்.
பருத்தித்துறை பேரூந்து சாலையின் முகாமையாளர் திரு.கந்தசாமி அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அங்கு சென்ற அமைச்சர் அவர்கள், சாலை தற்போது முகங்கொடுத்துள்ள நிலைமை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக