செவ்வாய், 16 நவம்பர், 2010

தொலைபேசியினூடாக குறுந்தகவல் அனுப்புவதன் மூலமாக நீர் கட்டணம் செலுத்தும் முறை..!

தொலைபேசியினூடாக குறுந்தகவல் அனுப்புவதன் மூலமாக நீர் கட்டணம் செலுத்தும் முறையொன்றை நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. ஜனாதிபதியின் இரண்டாவது பதவி ஏற்பு நிகழ்வை முன்னிட்டு நேற்றுமுதல் இந்த புதியமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை கூறியுள்ளது. நீர் கட்டணம் செலுத்துவதை இலகுபடுத்தும் நோக்குடன் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வைபவம் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக