செவ்வாய், 16 நவம்பர், 2010

பச்சிளம் குழந்தையை மலசலகுழிக்குள் போட்டுவிட்டு தலைமறைவான தாய் கைது..!

தான் பெற்றெடுத்துள்ள பச்சிளங் குழந்தையை மலசலகுழிக்குள் போட்டுவிட்டு தலைமறைவான நான்கு பிள்ளைகளின் தாயை மாத்தளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குழந்தையின் சடலத்தையும் பொலிஸார் நேற்று முன்தினம் கண்டெடுத்துள்ளனர். மாத்தளை பொலிஸ் பிரிவிலுள்ள சேலைக்கரை எனும் பிரதேசத்தில் தற் காலிகமாக வசித்து வந்துள்ள தாயொருவரே இவ்வாறு செய்துள்ளார். மூன்று நாளைக்கு முன் குழந்தையைப்பெற்ற இவர் அக்குழந்தையை குழிக்குள் போட்டுவிட்டு தனது கணவனுடன் ஏனைய பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு தூக்கி வீசிய பச்சிளங்குழந்தை ஆண் குழந்தை என்றும் 2அடி ஆழமுள்ள மலசல குழியொன்றிலேயே இக்குழந்தை போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக