செவ்வாய், 16 நவம்பர், 2010

யாழில் பஸ்சும் லொறியும் மோதியதில் 07பேர் படுகாயம்..!

ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மினி பஸ்ஸ_ம் புளியங் கூடலிலிருந்து யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த லொறியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் மினி பஸ்ஸில் பயணித்த 30பேரில் 7பேர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். விபத்துக்குள்ளான மினிபஸ் வீதியிலிருந்து விலகி தடம்புரண்டு கடும் சேதத்துக்குள்ளானது. மினிபஸ் சாரதி உட்பட 7பேருக்கு தலை, முகம், கால், கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சர்வதேச செஞ்சிலுவைச்சங்க மற்றும் வேலணை அரசினர் வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ்கள் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். சிலருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டதுடன் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக