திங்கள், 1 நவம்பர், 2010
கையடக்கத் தொலைபேசியூடாக ஆபாசப்படங்களைப் பார்வையிடும் இணையங்கள் 300 ஐத் தடைசெய்ய நடவடிக்கை..!
கையடக்கத் தொலைபேசியூடாக ஆபாசப்படங்களைப் பார்வையிடும் இணையங்கள் 300 ஐத் தடைசெய்ய அல்லது அவற்றைப் பார்வையிடமுடியாத வாறு தடுப்புக்களை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்கும் படி பத்தரமுல்லை சிறுவர் மற்றும் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொலைத்தொடர்புகள் ஒழங்குபடுத்தல் ஆணைக் குழுவிற்கு இவ்வாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இது வரை மொத்தம் 547 இணையங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அவற்றுள் 185ல் இலங்கை இளைஞர் யுவதிகள் மற்றும் சிறுவர்கள் இதில் பங்கெடுத்துள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக