திங்கள், 1 நவம்பர், 2010

கிண்ணியா, கண்டாக்காடு மக்களை விரட்டப்பட்டு குடிசைகள் எரிப்பு..!

அத்துமீறிய குடியேற்றம் எனக்கூறி மீள்குடியேறிய திருமலை, கிண்ணியா, கண்டாக்காடு மக்களை விரட்டியதோடு அவர்களது குடிசைகளையும் ஒரு குழுவினர் எரித்து நாசப்படுத்தியுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநரின் கட்டளைக்கமைய மூன்று வாகனங்களில் வந்த பொலிஸாரே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 300ற்கும் மேற்பட்ட ஆண்டுகளாகத் தாம் குடியிருந்து பயிர்செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் சம்பந்தமாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக்கிடம் கேட்டபோது, அரசஅதிபரின் அனுமதியுடனேயே இவர்கள் குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் அவர்களின் காணி என்பதற்கான உறுதிப்பத்திரம், தேர்தல் இடாப்பு, பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், தேசிய அடையாள அட்டை என்பனவும் கண்டாக்காடு என்ற பெயரிலேயே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக