திங்கள், 1 நவம்பர், 2010

உலக எக்ஸ்போ கண்காட்சியின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு..!

ஷங்காயில் நடைபெற்றுவரும் உலக எக்ஸ்போ கண்காட்சியின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கலந்து கொண்டுள்ளர். இதன்போது சீனாவின் பிரதமர் உட்பட பல நாட்டு பிரதமர்களும் கலந்து கொண்டிருந்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த இராமேசுவரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் பணம் மற்றும் படகில் இருந்து இறால், மீன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இவ்வாறான பிரச்சினைகளுக்கு தாம் முகங்கொடுப்பதாகவும் அரசியல்ரீதியில் தமக்கு எந்தவொரு சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என்றும் மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடற்படையினரின் தாக்குதலைக் கண்டித்து இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 23 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆணையாளருடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மீண்டும் நேற்றுமுன்தினம் இரவு தொழிலுக்குச் சென்றுள்ளனர். அதன்போது அவர்கள் மீண்டும் தாக்கப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை கடற்படையினர் தாக்குவதாகக் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் தமிழக அரசியல்வாதிகளின் படகுகள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி வருவதாகவும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக