வியாழன், 14 அக்டோபர், 2010

காத்தான்குடியிலிருந்து பாணந்துறைக்கான நேரடி பஸ்சேவை..!

மட்டக்களப்பு, காத்தான்குடியிலிருந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாணந்துறைக்கான நேரடி பஸ்சேவை இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டதாக காத்தான்குடி இலங்கை போக்குவரத்து டிப்போ முகாமையாளர் ஏ.எல்.எம்.பழுலுல்லாஹ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இ.போ.ச. டிப்போவினால் நடத்தப்படும் இப்பஸ்சேவை காலை 6.45 மணிக்கு காத்தான்குடி பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பமாகி 7.15 மணிக்கு மட்டக்களப்பு பஸ்தரிப்பு நிலையத்தில் தரித்து நிற்கும். பின் அங்கிருந்து ஏ5 பாதையூடாக புல்லுமலை - பதுளை வழியாக பலாங்கொடை சென்று அங்கிருந்து பாணந்துறையை அடையுமென மட்டக்களப்பு சாலை முகாமையாளர் துரை மனோகரன் தெரிவித்தார். மறுநாள் காலை 7.15 மணிக்கு பாணந்துறையிலிருந்து நேரடியாக காத்தான்குடி நோக்கிப் புறப்படவுள்ளதும் குறிப்படத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக