வியாழன், 14 அக்டோபர், 2010

நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க கைது..!

நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க இன்றுபகல் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் கண்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக மத்திய மாகாண பிரதிப் பொலீஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர் கொடுத்த மோசடி தொடர்பான புகார் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலீசாரினால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக