
அம்பாறை அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளின் தொகை தற்போது அதிகரித்துள்ளதால் இலங்கை போக்குவரத்து சபையினர் அக்கரைப்பற்று சாலையிலிருந்து தினமும் இரண்டு பஸ்கள் யாழ்ப்பாணத்திற்கு புறப்படுவதாக அக்கரைப்பற்றுச் சாலை முகாமையாளர் யூ.எல்.எம். சம்சுதீன் தெரிவித்துள்ளார். இதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அக்கரைப்பற்று, கல்முனை, அம்பாறை, சம்மாந்துறை ஆகிய இ.போ.ச. சாலைகளைச் சேர்ந்த பஸ்கள் காலையிலும் மாலையிலும் இரண்டு பஸ்கள் வீதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அக்கரைப்பற்று இ.போ.ச. சாலையிலிருந்து அதிகாலை 4மணிக்கு புறப்பட்டுச் செல்லும் பஸ் மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடைகின்றது. அங்கிருந்து மறுநாள் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மாலையில் அக்கரைப்பற்றை வந்தடைகின்றது. இவ்வாறே மாலை 5மணிக்கு அக்கரைப்பற்றிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பஸ் அதிகாலை 4.30மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.அங்கிருந்து மாலை 4.30மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு அக்கரைப்பற்றை வந்தடையும். தினமும் காலையிலும் மாலையிலும் இரண்டு பஸ்கள் யாழ்ப்பாணம் நோக்கி புறப்படுகின்றன.அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பயணிகளின் தொகை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றன. இதனால் மேலும் பஸ் வண்டிகளைசேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக