ஞாயிறு, 31 அக்டோபர், 2010

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நிலக்கண்ணிவெடிகளால் ஏற்படும் இழப்புகள் இலங்கையில் மிகக் குறைவு..!

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நிலக் கண்ணிவெடிகளால் ஏற்படும் இழப்புகள் இலங்கையில் மிகவும் குறைவாகவே உள்ளதென ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகார இணைப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்ளுர் அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அபாய விழிப்புணர்வுத் திட்டங்களால் இழப்புகளைக் குறைக்க முடிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 2001ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மாதாந்தம் 172 பேர் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்போடியாவில் 65பேர் மாதாந்தம் நிலக் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இலங்கையில் கடந்த 12 மாதங்களில் சராசரியாக மூவரே கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்ணிவெடிகளால் 18 சிறுவர் உட்பட 38பேர் கடந்த 12 மாதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் குறைவானதாகவே உள்ளதென சுட்டிக்காட்டப்படுகிறது. கண்ணிவெடி அபாயம் தொடர்பில் இலங்கையின் வட பகுதி மக்களுக்கு சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஐந்து கிராமங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 80 வீதமானவர்கள் கண்ணிவெடி தொடர்பான விழிப்புணர்வைக் கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக