திங்கள், 18 அக்டோபர், 2010

ஜனாதிபதி தலைமையில் வவுனியாவில் நடக்கும் வடக்கு அபிவிருத்திக் கூட்டத்துக்கு கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை குற்றஞ்சாட்டுகின்றார் சுரேஷ் எம்.பி..!

வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் வவுனி யாவில் நாளை நடைபெற உள்ள கூட்டத்துக்கு, வட மாகாணத்தில் பெரும் பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கடுமை யாகக் குற்றம்சாட்டி உள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந் திரன்.அரசு இவ்வாறு நடந்து கொள்வது தமிழ் மக்களைப் புறக்கணிப்பதற்கு ஒப்பானது எனவும் அவர் தெரிவித்தார். வவுனியா கூட்டுப்படைத் தலைமையகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை இக்கூட்டம் நடைபெற வுள்ளது.வடமாகாணத்தின் அபி விருத்தி தொடர்பான விடயங் கள், மீள் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது தொடர்பான விட யங்கள் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக் குடியமர்த்துவது ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது என வவு னியா அரச அதிபர் திருமதி பி. எஸ்.என். சார்ள்ஸ் தெரிவித்தார்.வடமாகாண அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டத் துக்கு அழைப்பு அனுப்பும் பொறுப்புதமக்கில்லை எனத் தெரிவித்த திருமதி சார்ள்ஸ் அந்தப் பொறுப்பு ஜனாதிபதி செயலகத்திடமே இருக்கின்றதெனவும் “உதயனு’க்குத் தெரிவித்தார்.கூட்டமைப்பில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து எம்.பிக்களும், வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று எம்.பிக்களும் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுகின்றனர்.முஸ்லிம் காங்கிரஸ் வட மாகாணத்தில் ஒரு எம்.பியைக் கொண்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் இப்போது அரசுக்கு ஆதரவளிக்கின்றது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு எம்.பிக்களையும், ஈ.பி.டி.பி மூன்று எம்.பிக்களையும் கொண்டுள்ளன. வட மாகாணத்திலுள்ள 15 எம்.பிக்களில் மொத்தம் ஆறு எம்.பிக்கள் அரசின் பக்கமுள்ளனர். யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே ஐ.தே.கட்சி எம்.பியான விஜயகலா மகேஸ்வரன் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு லண்டன் சென்றுள்ளார்.இந்த நிலையில் பெரும்பான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்புக்கு, இக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்படவில்லை. இது தமிழ் மக்களை அரசு திட்டமிட்டு புறக்கணிக்கும் ஒரு செயல் எனக் குற்றஞ்சாட்டினார் பிரேமச்சந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக