திங்கள், 18 அக்டோபர், 2010

மன்னார், ஓலைத்தொடுவாயில் சிங்களவர்களினால் சட்டவிரோதமான முறையில் மணல், மண் அகழ்வு..!

மன்னார், ஓலைத்தொடுவாய் கிராமத்தில் தென்பகுதியில் இருந்து வருகை தந்துள்ள சிங்களவர்களினால் சட்டவிரோதமான முறையில் மணல், மண் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என் அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த கிராமத்தில் உள்ள குடும்பம் ஒன்று தங்களுடைய காணியை சிங்களவருக்கு விற்றுள்ளனர். காணியை இரகசியமாக வாங்கி; குறித்த காணியில் சட்ட விரோதமான முறையில் மணல் மண்னை சேமித்து தென்பகுதிக்கு கொண்டு செல்வதற்காண நடவடடிக்கைகள் இடம்பெற்று வந்தநிலையில் தெரியவந்தள்ளது. இந்த நிலையில் கிராம மக்கள் குறித்த காணியை முற்றுகையிட்டு பார்த்தபோது அங்கு சுமார் 2000 டிப்பரில் ஏற்றக்குடிய மண் குவிக்கப்பட்டதனை கண்டுள்ளனர். பின் மன்னார் பொலிஸாருக்கு இது தொடர்பாக முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கின்றனர். குறித்த கிராமம் கடல் சார்ந்த பகுதியாக காணப்படுவதினால் எதிர்வரும் காலங்களில் கடல் அரிப்பிற்கு கிராமம் உள்ளாகலாம் என கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக