வெள்ளி, 29 அக்டோபர், 2010

புதுக்குடியிருப்பை அண்மித்த புதிய ஆறு கிராமசேவையாளர் பிரிவுகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பை அண்மித்த புதிய ஆறு கிராமசேவையாளர் பிரிவுகள் இவ்வாறு அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் குடியிருந்த இடங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. மக்கள் மாற்றிடங்களிலேயே குடியிருத்தப்படுவார்கள் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வடமாகாண செயற்குழு மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன இணைந்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி புதுக்குடியிருப்பு கிழக்கு மற்றும் மேற்கு, மல்லிகைத்தீவு, சிவநகர், ஆனந்தபுரம் மற்றும் மாந்தீவு ஆகிய ஆறு கிராமங்கள் புதிய பாதுகாப்பு வலயங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளக் கூடாது என அரசாங்கம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்னியில் புலிகளின் முக்கிய அலுவலகங்கள் தளங்கள் என்பன இயங்கிய பல இடங்களில் அரசாங்கப் படைகள் முகாம் அமைத்துள்ளன. இந்நிலையில் முதன் முதலில் வன்னயில் கிராமங்கள் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக