வெள்ளி, 29 அக்டோபர், 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம்..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவ ஏற்பாடுகளை முன்னெடுக்க முன்னாள் பிரதமர் அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அமைச்சர்களான மைத்திரிபால சிரிசேன, நிமல் சிரிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ன, விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்தன, சம்பிய ரணவக்க, பந்துல குணவர்தன, டளஸ் அலஹப்பெரும ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இதுதவிர பல உபகுழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.டிசம்பர் 26ம் திகதி தேசிய பாதுகாப்பு தினம்- சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட டிசம்பர் 26ம் திகதியை நினைவுகூரும் நோக்குடன் எதிர்வரும் டிசம்பர் 26ம் திகதி தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியின் ஆலோசனைக்கமைய தேசிய பாதுகாப்பு தின விசேட நிகழ்வுகளை யாழ். நகரில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ள தாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதுமே இந்த நிகழ்வின் நோக்கமாகும். பெருந்தொகையான மக்களின் பங்களிப்புடனும் தனியார் மற்றும் சிவில் அமைப்புகளின் பங்களிப்புடனும் யாழ். நகரில் இந்த தேசிய நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக