புதன், 27 அக்டோபர், 2010

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண்ணொருவர் களுவாஞ்சிக்குடியில் கைது..!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண்ணொருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை துறைநீலாவனை பகுதியிலுள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இவர் கைதுசெய்யப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட இவரிடமிருந்து 500 கிராமிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார். இந்நிலையில் மேலதிக விராரணைகள் தொடர்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக