புதன், 27 அக்டோபர், 2010
கட்டுகஸ்தோட்டை வாகன விபத்தில் குழந்தை பலி..!
கண்டி கட்டுகஸ்தோட்டையில் நேற்றையதினம் மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு குழந்தை ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளது. கட்டுகஸ்தோட்டை ரனவன பாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு பஸ்வண்டியில் மோதுண்டு இரண்டு வயதுக் குழந்தையொன்று மரணமாகியுள்ளது. பாதைக்கு அண்மித்த தூரத்தில் உள்ள வீட்டிலிருந்து இக் குழந்தை வெளியே வந்தபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக