புதன், 27 அக்டோபர், 2010

நிதி மோசடிகளை மேற்கொள்ளும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

நிதி மோசடிகளை மேற்கொள்ளும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள், பொது முயற்சியான்மை கமிட்டி(கோப்) முன் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். என்ன காரணத்திற்காக நட்டம் ஏற்படுகின்றதென்பதனை அவர்கள் விளக்க வேண்டும். நிதி மற்றும் நிர்வாக குறைபாடுகளினாலேயே அநேகமான அரசாங்க நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கி வருகின்றன. சில அரசாங்க நிறுவனங்கள் பல பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது. நிதி மற்றும் நிர்வாக தவறுகளை இழைத்த தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்க உயரதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக