வியாழன், 28 அக்டோபர், 2010

ஏழுமாத காலமாக கடலில் தத்தளித்து உயிர்தப்பிய பேருவளை மீனவர் நாடு திரும்பினார்..!

ஏழுமாத காலமாக கடலில் தத்தளித்து உயிர்தப்பிய பேருவளை மீனவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். கடந்த மார்ச் 19ம்திகதி நான்கு பேருடன் ஆழ்கடல் சென்ற டி.மகேஷ் பத்ம குமார மட்டுமே உயிருடன் மாலைதீவு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டார். நேற்று இலங்கை வந்த அவர் மாலைதீவு அரசுக்கு நன்றி களையும் தெரிவித்துக் கொண்டார். மாலைதீவில் துனுதுவா தீவில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கும் அவர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். இலங்கை விமான நிலை யத்தில் காலடி எடுத்து வைத் தமை தமக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி யதாகவும் இதற்காக உழைத்த அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக