ஞாயிறு, 15 நவம்பர், 2009

நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அதிசய நாக சிலை!

மட்டக்களப்பு மாவட்டத்தில்
மாவடிவேம்பு எனும் கிராமத்தில் நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் (10.11.2009) மாலை 4.00 மணியளவில் ஓர் அதிசயம் இடம்பெற்றுள்ளது. சிறுமியாக மனித உருவில் தோன்றிய நாகபூசணி அம்பாள் ஏனைய சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடியதாகவும் பின்னர் பெரியோர் அவதானித்ததும் ஆலமரத்திற்கு கீழே சென்று, நாகத்தின் உருவில் சிலையாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. பி.ப. 5.00 மணிவரையும் அச்சிலைக்கு இதயத்துடிப்பு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. அதன் வால்பகுதி மரத்தில் உள்நுழைந்திருப்பதுடன் வெளியே தலைப்பகுதி மாத்திரம் காணப்படுகின்றது. நேற்றிலிருந்து பலர் புதிதாகத் தோன்றிய இந்தச் சிலையைப் பார்வையிட்டு வருகின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக