வியாழன், 28 அக்டோபர், 2010
உத்தேச உள்ளுராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தாக்கல்..!
உத்தேச உள்ளுராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளது. உத்தேச உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தில் சிறுபான்மைக் கட்சிகளைப் பாதிக்கும் பல சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்தே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். உத்தேச திருத்தம் சிறுபான்மைக் கட்சிகளைப் பாதிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் உட்பட சில கட்சிகள், சிவில் அமைப்பு கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கள் தெரிவித்து வருகின்றன. உள்ளுராட்சி தேர்தல்கள் சட்டமூலம் வரவுசெலவுத் திட்டத்துக்கு முன்னர் விவா தத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. எனினும் பின்னர் அது கைவிடப்பட்டது. சிறுபான்மைக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி ஓர் இணக்கப்பாட்டுக்கு வர அரசு தீர்மானித் துள்ளதால் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் வரவு செலவுத் திட்ட விவாதத் துக்குப் பின்னர் நடைபெறுமெனத் தெரியவருகிறது. உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் முடிவடைகின்றது. அதற்கு முன்னர் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும். எதிர்வரும் மார்ச்மாதம் இத்தேர்தல்கள் நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்திருக்கின்றது. இதேவேளை, சிவில் அமைப்புக்கள் சிலவும் இந்த உள்ளுராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரியவருகிறது. ஜே.வி.பி. இதற்கு எதிராக ஏற்கனவே மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக