வெள்ளி, 15 அக்டோபர், 2010

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை..!

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் அடுத்தவாரத்தில் நடைபெறுமென தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசியல் கட்சியாக அனுமதிகோரி இது வரையில் 82 விண்ணப்பங்கள் தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள துடன், அதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒருசில விண்ணப்பதார ர்களுக்கு மாத்திரம் இதற்கான அழைப்பு விடுக்கப்படுமென அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்காக வழங்கப்பட்டுள்ள பிரமாணங்களிற்கேற்ப தகைமைகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்படமாட்டாது எனவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக