வியாழன், 21 அக்டோபர், 2010

21 வயதுக்கு குறைவான இளைஞர், யுவதிகள் இரவு விடுதிகள், கசினோ நிலையங்களுக்கு செல்லத் தடை..!

21 வயதுக்கு குறைவான இளைஞர், யுவதிகள் இரவு விடுதிகள், கசினோ நிலையங்களுக்கு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 21 வயதுக்குட்பட்டவர்கள் இரவு விடுதிகளிலோ கசினோ நிலையங்களிலோ வேலைசெய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் லெய்ஷா டி சில்வா சந்திரசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைஞர், யுவதிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ_லுகல்ல தலைமையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக