புதன், 20 அக்டோபர், 2010

ஜனாதிபதி ஓமந்தை ரயில் நிலையத்தை பார்வையிட்டார்..!

வவுனியாவுக்கு நேற்றையதினம் விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓமந்தையில் ரயில் நிலையத்தைப் பார்வையிட்டுள்ளார். வவுனியாவிலிருந்து தாண்டிக்குளம் வரையிலான ரயில் பாதைகள் இப்போது அமைக்கப்பட்டுள்ளன. தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தைவரையிலான 10கிலோ மீற்றர் தூரமான ரயில் பாதை அமைப்புப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்துக்கு அரசாங்கம் 45 கோடி ரூபாவைச் செலவிடுகின்றது. ஓமந்தை வரையிலான ரயில்பாதை அமைப்புப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் முடிக்க அரசாங்கம் எதிர்பாhக்கின்றது. ஜனாதிபதியுடன்; வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ -டக்ளஸ் தேவானந்தா, குமார் வெல்கம, ரிஷாத் பதியுதீன்- பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ - ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ - நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோர் ரயில் நிலையத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக