திங்கள், 27 செப்டம்பர், 2010

தொழில் கண்காட்சி மூலம் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு - பிரதி அமைச்சர்..!!

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு தொழில் கண்சாட்சி ஒன்றை அரசாங்கம் ஒழுங்கு செய்துள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார். இந்தத் தொழில் கண்சாட்சி எதிர்வரும் 29, 30 ஆம் திகதிகளில் வவுனியா பம்பைமடுவில் உள்ள புனர்வாழ்வு முகாமில் நடைபெறவுள்ளது. இதில் தனியார்துறையைச் சேர்ந்த 25 நிறுவனங்கள் பங்குபற்றவுள்ளன.புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 11ஆயிரத்து 800 முன்னாள் விடுதலைப்புலி போராளிகள், முகாம்களில் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் நாலாயிரம் பேர் விசேட முகாம்களில் உள்ளனர் எனவும் அவர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அடுத்த மாதமளவில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் 2,000 பேரை விடுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக