செவ்வாய், 28 செப்டம்பர், 2010
மாவட்ட ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் பொதுஅறிவு போட்டிகளுக்கு ஏற்பாடு..!!
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரையின் கீழ் மாவட்ட ரீதியில் பாடசாலைகளுக் கிடையிலான பொது அறிவு போட்டிகளின் 2ஆம் கட்டம் கேகாலை, மாவட்டத்தில் நடைபெறுகின்றது. கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மாவட்ட ரீதியாக நடத்தப்பட்டு வருகின்ற பொது அறிவு போட்டியில் முக்கியமாக கால்நடை வளங்கள் சம்பந்தமான அறிவூட்டல்களும் இடம்பெறுவதாகவும் எதிர்காலத்தில் இளம் தலைமுறையினரின் பங்களிப்பினால் தேசிய பாலுற்பத்தியில் அதிகரிப்பினை மேற்கொள்ளவும் அத்துடன் மேலதிக வருமானத்தை உருவாக்கி தன்னிறைவான வாய்ப்புகள் உள்ளதாகவும் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் செல்வி எஸ். கஜநாயக்க தெரிவித்தார்.இத்தகைய போட்டிகளானது 2ஆம் கட்டமாக கேகாலை மாவட்ட தெரணியகல சிறி சமன் தேசிய பாடசாலையில் நேற்றுக்காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த நிகழ்வு கால்நடை வள பிரதி அமைச்சர் ஆர். மித்திரபால தலைமையில் நடைபெறுவதுடன் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கமகே, சீ.என்.எஸ். கமஹே, செல்வி கஜநாயக்க போன்றோர் கலந்து கொள்கின்றனர்.இப் போட்டிகள் நாடளாவிய ரீதியில் நடைபெறுவதுடன் இன்றைய போட்டியில் முதலில் கே/சிறி சமன் தேசிய பாடசாலை தெரணியகலை, ருவன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரி ஆகியன போட்டியிடுவதுடன் இரண்டாவதாக மரியாள் கல்லூரியும் பின்னவள மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகளும் போட்டியிடுகின்றனர்.இப் போட்டிகளின் முதற்கட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நு/ காமினி தேசிய வித்தியாலயத்துடன் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் போட்டியிட்டது. அதே போல் நு தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்துடன் நு/ அக்கரப்பத்தனை தமிழ் வித்தியாலயம் போட்டியிட்டது. இப் பொது அறிவு போட்டிகளானது விரைவில் ரூபவாஹினி தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் போட்டிகளுக்கு வரையறுக்கப்பட்ட பெலவத் டெய்ரி இன்டஸ்ரீஸ் மில்கோ நிறுவனமும் லங்கா மில்க்புட்ஸ் நெஸ்லே மக்கள் வங்கி, சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ், ஹேலீஸ் அக்ரா புரடக்ஸ், சுவிஸ் சீஸ் கம்பனி போன்றோர் அனுசரணை வழங்குவதாகவும் கஜநாயக்க தெரிவித்தார். மேற்படி போட்டிகளின் முடிவுகள் கூடிய விரைவில் ரூபவாஹினி தொலைக்காட்சியில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக