திங்கள், 21 ஜூன், 2010
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உணவு விடுதிகளில் புத்தர் சிலைகள்..!!
உலகின் பிரதான நகரங்கள் பலவற்றில் நடத்தப்பட்டுவரும் புத்த பா என்ற உணவு மற்றும் கேளிக்கை விடுதிகள் தொடர்பாக கவனம் செலுத்த புத்த சாசன அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தி.மு. ஜயரத்ன தீர்மானித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட உணவு விடுதிகள் தொடர்பாக அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகருக்கு அறிவுறுத்துவதுடன் அதுபற்றிய அறிக்கையொன்றை அனுப்புமாறும் கேட்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. புத்த பா உணவு விடுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளதுடன் அந்த சிலைகளுக்கு அருகில் மதுபாவனை இடம்பெறுகிறது. இவ்வாறான விடுதிகளில் புத்தர் சிலைகள் எதற்காக வைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும், அந்த இடங்களில் உள்ள புத்தர் சிலைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்ட நாடுகளுக்கு ஆலோசனை வழங்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக