திங்கள், 21 ஜூன், 2010

இலங்கையின் யுத்தத்திற்குப் பின்னரான நிலமை குறித்து கொபி அனான் கவலை..!!

இலங்கையின் யுத்தத்திற்குப் பின்னரான நிலமை குறித்து கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் தெரிவித்துள்ளார். படுகொலைகள் இடம்பெறுவது இலங்கையில் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், இது போன்ற படுகொலைகள் தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள அனான் இது விடயத்தில் சர்வதேச சமூகம் முனைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறித்தும் எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பது குறித்தும் புலம்பெயர் மக்கள் நேரடியாக பார்வையிட வேண்டும் எனவும் அவர் அவர் கோரியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக