வியாழன், 3 ஜூன், 2010
மீள்குடியேற்றம் நடைபெறும் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்..!!
மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்ற கிளிநொச்சியின் உதயநகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த நபரொருவர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவருக்கு 10ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உதயநகர் மேற்கைச் சேர்ந்த செல்லத்துரை ராஜா என்பவருக்கே கிளிநொச்சி நீதவான் இத்தண்டனையை வழங்கியுள்ளார். சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டபோது அவர்வசம் 65கிராம் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் 10ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன் தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறினால் 3மாதச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக