வியாழன், 3 ஜூன், 2010

பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம்-ஜனாதிபதி..!!

பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என மாகாண,பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். தமது செயலாளரூடாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு இப்பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதால் பொதுமக்களின் பணம் விரயமாக்கப்படுவதாகவும் அதனை அபிவிருத்திப் பணிகளுக்குச் செலவிடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், வெளிநாடுகளுக்கு அரசசெலவில் செல்லவிருந்த 27பேரின் விண்ணப்பங்களையும் அவர் நிராகரித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக