வியாழன், 3 ஜூன், 2010

சர்வதேச இந்தியத் திரைப்படவிழா இன்று ஆரம்பம்..!!

பல மாதங்களாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சர்வதேச இந்தியத் திரைப்படவிழா இன்று ஆரம்பமாகின்றது. இந்தியத் திரைப்படக் கலைஞர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் கௌரவிக்கும் முகமாக வருடாவருடம் நடத்தப்படும் இவ்விழாவை நடத்துவதற்கென இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது. 11 சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை நடத்துவதற்கு தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அவுஸ்திரேலியா, தென்கொரியா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு இலங்கை இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது. இன்று இலங்கையில் ஆரம்பமாகும் சர்வதேச இந்தியத் திரைப்படவிழா நாளைமறுதினம் 5ம் திகதி விருதுவழங்கும் விழாவுடன் நிறைவடைகின்றது. இன்றுமாலை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நவநாகரிக ஆடை அலங்காரக்காட்சி நடைபெறுகின்றது. இலங்கையின் டைமக்ஸ் கார்மென்ஸின் அவராத்தி படைப்புகள் இங்கு அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன. ஏனைய நவநாகரிக ஆடை அலங்காரக்காட்சிக்களில் போலல்லாமல் இந்தியாவின் பிரபல இசை இரட்டையர்களான சலீம் சுலைமான் ஆகியோர் இதற்கு நேரடியாக இசை வழங்குகின்றனர். பிரபல நட்சத்திரங்களான விவேக் ஒபரோய், தியா மிர்ஸா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் சர்வதேச வர்த்தக சங்க மாநாடு நாளைகாலை, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி இம்மாநாட்டை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக