செவ்வாய், 4 மே, 2010

முதல்வருக்கு சோப்பு போடுகிறேனா? கமல்..!!

"பெண் சிங்கம்' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: முதல்வர் விழாவில் கலந்துகொள்வது குறித்து என்னிடம் பலரும் பலமுறை கேட்டுவிட்டார்கள். பிடித்தவர்கள், நல்லவிதமாய் பேசுவதாகக் கூறுகிறார்கள். பிடிக்காதவர்கள், "எதற்கு சோப்பு போடுகிறாய்?' என்று கேட்கிறார்கள்.
முதல்வரைப் பற்றி பேச எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். அதில் நன்றி கலந்திருக்கிறது. தயவு செய்து அதை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
அவர் எழுதிய பராசக்தி வசனத்தை சிறு வயதிலேயே பேசிக் காட்டியதால்தான் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வசனத்தை பலர் இன்னும் ஞாபகம் வைத்திருக்கும் அளவுக்கு அவர் எழுதியிருக்கிறார். வைரமுத்து கூறியபடி மெல்லினம், வல்லினம் போன்றவற்றை உரிய இடங்களில் பயன்படுத்தி தமிழைப் பாய வைக்கும் திறன் கொண்டவர்.
முதல்வர் கருணாநிதியின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பைத் தனக்கு தர வேண்டும் என ராம.நாராயணன் கேட்டுக்கொண்டார். எனக்கு 99-வது படத்தை இயக்கும் வாய்ப்பையாவது தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
÷இந்த ஆசை நிறைவேறுவதற்கு ஏற்ப அவருடைய ஆயுளின் எண்ணிக்கையும் கூடும். இதற்குக் காரணம் அவர் சீராக தன்னையும் நாட்டையும் காத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள் எனக் கேட்கிறார்கள்.
இப்போது கூட, இந்த ஆடியோ சி.டி.யை வெளியிடும்போது குறுந்தகடு என்று சொன்னார்களே பெருந்தகடாக இருக்கிறதே என்றார். என்னுடைய இந்தப் பேச்சு இந்த அரங்கில் சுவாரஸ்யம் பெறுவதற்குக் காரணம் அவர் கூறியதை நான் குறிப்பிட்டதால்தான். பஸ்களில் திருக்குறளை வைத்தவர் அவர். பஸ்களில் போகும்போது அதைப் படித்துத்தான் திருக்குறளைக் கற்றுக்கொண்டேன். எங்களைத் தமிழில் குளிக்க வைத்தவருக்கு நான் சோப்பு போட முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக