வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

05 கோடி ரூபா நாணய கடத்தல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் முறியடிப்பு..!!!!

இலங்கை நாணயப்படி சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு கரன்சி நோட்டுக்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டார் நோக்கி புறப்படவிருந்த கட்டார் எயார் வேஸுக்குச் சொந்தமான கியூ. ஆர். 663 ரக விமானத்தில் செல்வதற்காக வந்த கொழும்பு 15, மட்டக்குளியைச் சேர்ந்த 36 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது பயணப் பொதிகளிலிருந்து 950 குவைத் தினார், 1,10,000 ஜப்பான் யென், 48,500 கட்டார் ரியால், 8,02,000 சவூதி ரியால், 72,000 அமெரிக்க டொலர், 450 யூரோ, 30,000 ஸ்டேர்லிங் பவுண், 33,500 ஐ. அ. இராச்சிய திர்ஹாம்  ஆகிய வெளிநாட்டு நாணய கரன்சி நோட்டுக்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன.


இவை இலங்கை நாணயப்படி 4 கோடியே 83 லட்சத்து 9,692 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

உதவி சுங்க அத்தியட்சகர் திலங்க, சமரவீர, முதித விதான, லக்மால் தென்னகோன், டங்கன் ஹெட்டியாராச்சி, திருமதி சந்துலி ஆகியோர் இக்கடத்தல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக