வியாழன், 19 ஜூன், 2014

மாதகலில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடியே 33 லட்சம் ரூபா!!

இன்று வியாழக்கிழமை அதிகாலை இளவாலைப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடியே 33 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. வடமாகாணத்திலேயே முதற்தடவையாக 133 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது என்று இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். 133 கிலோ நிறையுடைய கஞ்சாவை மிகவும் கவனமாக 59 சிறிய பெட்டிகளில் பொதி செய்து அவற்றை ஐந்து பெரிய பார்சல்களாக்கி வெளியே மணம் வீசாதிருக்க நறுமணமும் ஊட்டி நூதனமாக
கடத்தல் காரர்கள் கடத்திவந்துள்ளனர். கஞ்சா கடத்தி வரப் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் இயந்திரம் திகையறிகருவி என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக