செவ்வாய், 4 மே, 2010
கிளப்களுக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை : அசின்..!!
பாலிவுட் லண்டன் ட்ரீம்ஸுடன் புஸ்வானமாகிப் போனதால் அசின் மீண்டும் தமிழுக்குத் திரும்பி விட்டார். மற்றவர்களைப் போல பார்ட்டிகளுக்குப் போவதில் ஆர்வம் காட்டாதது ஏன் என்ற கேள்விக்கு, நான் அதிகம் பார்ட்டிகளுக்குப் போவதில்லை. நண்பர்களுடன் வீட்டிலேயே பார்ட்டி வைப்பதுதான் பிடிக்கும். நான் புகை பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை. எனவே கிளப்களுக்குப் போய் பார்ட்டியைக் கொண்டாடுவதற்கான அவசியம் இல்லை.இருப்பினும் நண்பர்கள் அல்லது திரைத்துறையினர் தொடர்பான பார்ட்டி என்றால் கலந்து கொள்வேன் என்றார் அசின். சரி இந்திய கேப்டன் டோணி உங்கள் வீட்டிற்கு வந்தாராமே என்ற கேள்விக்கு அது குறித்து நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஏன் நட்பை களங்கமாக பார்க்கிறார்கள். நானும், டோணியும் சேர்ந்து ஒரு விளம்பரத்தில் நடித்தோம். அதில் ஏற்பட்டதுதான் இந்த நட்பு, அவ்வளவுதான் என்றார் அசின்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக