சனி, 1 மே, 2010

யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதி என்னை தெரிவு செய்தமைக்கு நன்றி.. -மேர்வின் சில்வா..!

யார் என்ன சொன்னாலும் தன்னை ஊடகத்தறை பிரதி அமைச்சராக தெரிவு செய்தமைக்கு ஜனாதிபதி ம‘pந்த ராஜபக்ஷ நன்றி தெரிவிப்பதாக ஊடகத்துறை பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் ஊடகவியலாளர்களே தனது தலைவர்கள் இனி ஊடகவியலாளர்களது பாதுகாப்பை மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரையும் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சிகளின் மாநாட்டின் போதே இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிகளை சரியாக பங்கிடக்கூடிய தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் இருக்கிறது ஊடகவியலாளர்களான நீங்கள்தான் எனது தலைவர்கள் இனிமேல் சேதமடைந்த வீதிகளை மாத்திரம் காட்டாது புனரமைக்கப்பட்ட வீதிகளையும் சேர்த்து காட்டுங்கள் இதற்காக அரசாங்கத்திற்காக மட்டும் செயற்படும்படி நாம் கூறவில்லை அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் காட்டுமாறு கேட்கிறோம் உங்களது பாதுகாப்பு இலங்கை காப்புறுதி கூட்டத்தாபனத்தில் காப்புறுதி செய்யப்பட்டதற்கு ஒப்பானது இனி உங்கள் பாதுகாப்பை நான் பொறுப்பேற்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக