சனி, 17 ஏப்ரல், 2010

புகலிடம் தொடர்பிலான ஆஸியின் நிலைப்பாட்டுக்கு டென்மார்க் எதிர்ப்பு..!

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புகலிடம் வழங்குவது குறித்து அவுஸ்திரேலியாவின் நிலைப்பாட்டுக்கு டென்மார்க் அரசாங்கம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. இலங்கை தமிழ் அகதிகளுக்கு புகலிடம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பில் அவுஸ்திரேலியா முன்வைத்த காரணிகள் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல எனவும் டென்மார்க் அறிவித்துள்ளது. குறிப்பாக ஏனைய சில நாடுகளும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்குஅடைக்கலம் வழங்குவதை நிறுத்திக் கொண்டுள்ளன என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்தும், குடிவரவமைச்சர் கிறிஸ் இவான்ஸ்சும் வெளியிட்டுள்ள கருத்து ஏற்புடையதல்ல என்றும் டென்மார்க் சுட்டிக்காட்டியுள்ளது. எந்தெந்த நாடுகள் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புகலிடம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதென்பதை அவுஸ்திரேலியா சுட்டிக்காட்ட வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக