சனி, 17 ஏப்ரல், 2010

இலங்கையில் சாதகமான சூழல் உள்ள நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு அகதி அந்தஸ்த வழங்கத் தேவையில்லை-கெவின் ரூட்..!

இலங்கையில் சாதகமான சூழல் காணப்படுகின்ற இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியமில்லையென்று அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலும், இலங்கையிலும் தற்போது யுத்தம் நிறைவடைந்து சுமுகநிலை தோன்றி வருகிறது. இந்நிலையில் அவர்கள் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கும்போது இது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அகதி அந்தஸ்து வழங்கல் தொடர்பிலான கொள்கை மாற்றம் தொடர்பில் கருத்துரைத்த கெவின்ரூட், முழு கொள்கையும் மாற்றி அமைக்கப்படவில்லை. எனினும் நிரபராதியான அகதிகள் என அடையாளம் காணப்படாத பட்சத்தில் அவர்களின் அந்தஸ்து மனு நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவர் என்று தெரிவித்துள்ளார். தமிழ் அகதிகளுக்கான இணையமூடாக கப்பம்பெற முயற்சித்தவர் கைது!இணையத்தளமூடாக பெண் பொறியியலாளர் ஒருவரிடம் கப்பம் பெற்றுக் கொள்ள முயற்சித்த மற்றுமொறு பொறியியலாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர் இலங்கையை சேர்ந்த பெண் பொறியியலாளர் ஒருவரின் நிர்வாணப்படங்களை இணையத்தில் பிரசுரிக்கப் போவதாக அச்சுறுத்தல் விடுத்து 5லட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டிருந்தது. இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த இலங்கை பொறியியலாளர் குவைத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் குறித்த சந்தேகநபரை கைது செய்ததாகவும் மேலும் தெரிய வருகிறது. இதேவேளை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்பொறியியலாளர் இரண்டு தடவைகள் 25000ரூபா மற்றும் 30000ரூபா என்ற அடிப்படையில் குறித்த நபருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக