புதன், 7 ஏப்ரல், 2010

தேர்தலின்போது வன்முறைகளில் ஈடுபடுவோர்மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலீஸ் மாஅதிபர் தெரிவிப்பு

நடைபெறவுள்ள தேர்தலின்போது வன்முறைகளில் ஈடுபடுவோர்மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலீஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு திட்டமிட்டபடி அதிஉச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கென 58ஆயிரத்து 700பொலீசார் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் தேர்தல் கடமையில் ஈடுபட 19ஆயிரத்து 500முப்படையினரும், 413பொலீஸ் நிலையங்களிலுள்ள பொலீசாரும் தயார்நிலையில் இருப்பதாகவும பொலீஸ் மாஅதிபர் கூறியுள்ளார். இதேவேளை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள 2லட்சத்து 584நடமாடும் பாதுகாப்பு பிரிவுகளும் நேற்றுமுன்தினம் முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக