
மகாசங்கத்தினர் சகல இன சமூகங்களையும் ஒரே விதமாகவே நடத்துவதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார் பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சமூகத்தினருக்கு மகாசங்கத்தினர் எவ்வித பாரபட்சமும் காட்டுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதனை முதனிலை நோக்கமாக கொண்டு அனைவரும் செயற்படவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிற்கான உயர்ஸ்தானிகர் பீட்டர் ஹெய்ஸ், மல்வத்து பீடாதிபதியை சந்தித்தபோது இந்த விடயங்களை மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக