வியாழன், 29 ஏப்ரல், 2010

மேலுமொரு சட்டவிரோதபடகு அவுஸ்திரேலியாவில் 41பேருடன் கைப்பற்றப்பட்டுள்ளது..!!

அவுஸ்திரேலியாவை அண்மி;த்த கடற்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மேலுமொரு சட்டவிரோத படகை அவுஸ்திரேலிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் 41பேர் குறித்த படகில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது மேற்கு அவுஸ்திரேலிய கடற்கரை அருகில் உள்ள ஆஷ்மோர் தீவு அருகில் 41பேருடன் இந்த படகு பயணித்துக்கொண்டிருந்தது இதனை அவதானித்த அவுஸ்திரேலிய கடற்படையினர் அந்த படகை இடைமறித்து விசாரணைக்காக அருகிலுள்ள கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதுதொடர்பாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிராண்டோ ஓ கொன்னார் கருத்து தெரிவிக்கையில் குறித்த படகில் உள்ளவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை எனவும் அநேகமானவர்கள் இலங்கையர்களாகவோ அல்லது ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களாகவோ இருக்ககூடும் என அவர் தெரிவித்துள்ளார் எவ்வாறாயினும் புகலிடம் கோரும் அவர்களின் கோரிக்கையை இன்னும் ஆறு மாத காலத்துக்கு பரிசீலிக்கமுடியாது என பிராண்டோ ஓ கொன்னார் சுட்டிக்காட்டியுள்ளார் இதேவேளை அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தமாதம் 9ம் திகதி முதல் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு மூன்று மாதங்களும் ஆபிரிக்கர்களுக்கு 6மாதங்களும் புகலிடம் கோரிவருவதை தடைசெய்துள்ளமை குறிப்பிடதக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக