திங்கள், 19 ஏப்ரல், 2010

நிபந்தனைகளில் அடிப்படையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார் -சம்பந்தன் தெரிவிப்பு..!

நிபந்தனைகளின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிளவுபடாத இலங்கைக்குள் தேசிய இனப்பிர்ச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வுத்திட்டமொன்று வழங்குதல் மற்றும் இடம்பெயர் மக்களை மீளக்குடியேற்றுதல் போன்றவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இச்சந்திப்பு சம்பந்தரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இடம்பெற்றுள்ளது புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 13பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசியப்பட்டியல் உறுப்பினரும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தங்களது கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளமை கடந்த தேர்தல் முடிவுகளின் மூலம் புலப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்படக் கூடாத தருணத்தில் தேர்தல் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தளவு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக