
அரச நிறுவனங்களில் அமைப்பு ரீதியான மாற்றம் அவசியமென ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது ரயில்வே திணைக்களம் போக்குவரத்து சபை போன்றவற்றில் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய அமைப்பு ரீதியிலான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் வேட்பாளரும் சிரேஷ்ட பொருளியல் நிபுணருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். பிழையான வர்த்தக அணுகுமுறைகள் மற்றும் அரசியல் மயப்படுத்தல்களினால் அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரச நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் ஏனைய செயற்பாடு நடவடிக்கைகளில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக