வியாழன், 29 ஏப்ரல், 2010

வடக்கு கிழக்கில் கைத்தொழில் பேட்டைகள் -அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு..!!


கூடுதலான கைத்தொழில் பேட்டைகளை வடக்கு கிழக்கில் நிறுவுவதற்கு திட்டமிட்டிருப்பதாக இதுகுறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும் கைத்தொழில் வர்த்தகதுறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கைத்தொழில் துறையை மேம்படுத்துவதன் மூலம் அதிகளவிலான தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க முடியுமென்றும் வேலையற்ற பட்டதாரிகளை இதற்குள் ஈடுபடுத்த முடியுமென்றும் சுட்டிக் காட்டினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து முதலீடுகளை செய்து அதன் மூலம் உற்ப்பத்தியாகும் கைத்தொழில் பொருட்களை அம்முதலீட்டாளர்களின் நாடுகளிலேயே சந்தைப்படுத்துவதே எனது இலக்கு இதன்மூலம் அதிகளவு அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்ள முடிவதுடன் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவு வருமானத்தையும் ஏற்படுத்தி; கொடுக்க முடியுமென்றும் குறிப்பிட்டார். இதேவேளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முதற் தடவையாக அமைச்சின் கீழுள்ள ஹோமாக பனாகொட கைத்தொழில் பேட்டைக்கு நேற்று விஜயம் செய்து அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக