அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் 2500ரூபாவால் உயர்த்தப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்துறை ஊழியர்களுக்கு 2500ரூபா சம்பள உயர்வு வழங்குவதாக அளி;க்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார் கொழும்பு என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல் மற்றும் வீண்விரயம் தொடர்பில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30வீதம் வீண்விரயமாவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த பணம் தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் நலத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக