நாவலப்பிட்டி கும்புறுப்பிட்டி பகுதிகளில் இடம்பெறும் மறுவாக்குப் பதிவில் பொதுமக்கள் எவ்விதமான அச்சமும் இல்லாமல் தமது வாக்குரிமையை பயன்படுத்த முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த இரு இடங்களின் உண்மையான நிலவரம் மக்களை தவறாக வழிநடத்துவதற்கு சில குழுக்கள் முயற்சிப்பதாக பொலிஸார் எச்சரித்திருக்கின்றனர் அங்கு வன்முறைகள் மற்றும் பதற்றம் காணப்படுகிறது என்ற பிரதிமையை ஏற்படுத்துவதற்கு சில குழுக்கள் முயற்சிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் நாவலப்பிட்டி கும்புறுப்பிட்டி பகுதியில் அமைதி நிலவுவதாகவும் வாக்காளர் அச்சமின்றி வாக்களிப்பில் கலந்துக் கொள்ள வேண்டுமெனவும் பொலிஸ் தேர்தல் செயலகத்திற்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார். இந்த இரு பகுதிகளிலும் தற்போது தேர்தல் சட்டவிதிகள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது பயப்படுவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை மக்கள் அமைதியான முறையில் செவ்வாய்க்கிழமை வாக்களிக்க முடியும் என்றும் அவர் கூறினார் வன்முறைகள் வாக்குமோசடிகள் இடம்பெற்றதையடுத்து இந்த இரு இடங்களிலும் தேர்தல் இரத்துச்செய்யப்பட்டு நாளை மறுவாக்களிப்பு இடம்பெறுவதும் குறிப்பிடதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக