ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

கிறிஸ்துமஸ் தீவிலுள்ள ஒருதொகுதி ஆண்களை படைமுகாமிற்கு மாற்ற நடவடிக்கை

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலுள்ள நெரிசல்மிக்க தடுப்பு முகாமிலிருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளில் ஒருதொகுதி ஆண்கள் படைமுகாம் ஒன்றுக்கு மாற்றப்படவுள்ளனர். இது முன்னர் விமானப்படையினர் பயன்படுத்திய முகாமென்று கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகில் செல்லும் ஆப்கானியர்கள் மற்றும் இலங்கையர்களை பதிவுசெய்வது இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார். இதுபோல் கிறிஸ்துமஸ் தீவிலுள்ள பெண்களும் வேறொரு முகாமிற்கு மாற்றப்படவிருப்பதாக அவுஸ்திரேலியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக